Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நகைக்கடன் தள்ளுபடி…. முதல்வர் ஸ்டாலினுக்கு விடுக்கும் முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் அனைத்து ஏழை, எளிய மக்களின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு நிபந்தனைகள் புகுத்தப்பட்டு, அனைத்து நிபந்தனைகளுக்கும் பொருந்துபவர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் 13 லட்ச ஏழை விவசாயிகள் இந்த நகைக்கடன் தள்ளுபடியை பெற இருக்கின்றனர்.

இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு முன்பே வட்டி செலுத்துமாறு தமிழக கூட்டுறவு வங்கி சார்பாக தமிழக அரசிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடியை அறிவித்த உடனேயே வாடிக்கையாளர்கள் அவர்களின் நகைகளுக்கான வட்டியை செலுத்துவதை நிறுத்தி விட்டனர். அவ்வாறு வாடிக்கையாளர்கள் வழங்கும் வட்டியை வைத்து மட்டுமே அனைத்து வங்கிகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நகைகளை தள்ளுபடி செய்வதற்கு முன்பாகவே தமிழக அரசு வட்டி செலுத்தவில்லை என்றால் சங்கங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பங்குபெற்று விரைவில் தள்ளுபடி செய்வதற்கான வட்டியை கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |