Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தைப்பூசத்தை முன்னிட்டு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் பத்திரபதிவு மேற்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதால் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு முக்கிய பண்டிகை நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும் என்று பதிவுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

Categories

Tech |