தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், சுதந்திர தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கம் நினைவு நாள், மே தினம், குடியரசு தினம் ஆகிய 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் திறக்கப்பட்டு நல்ல வசூலாகி வருகிறது. இந்த நிலையில் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை இல்லாத காரணத்தினால் வார விடுமுறை வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மதுவிலக்கு அமல்படுத்தும் நோக்கில் சுமார் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில் திமுகவின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் சிறப்பு தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். எனவே இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.