Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. இனி இது கட்டாயம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இது உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளின் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும், மது பாட்டில்களில் விலை எனக்கும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |