இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று முதல் கட்டணமில்லா முடிக்காணிக்கை திட்டம் பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வந்தது.இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலு இந்து அமைப்புகள் வரவேற்பை பெற்றுள்ளது.