Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோவில்களில் தடை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற திங்கட்கிழமை முதல் கோவில்கள் திறக்கப்படும் நிலையில் அர்ச்சனை செய்யவும், தேங்காய் உடைக்கவும் தடை தொடரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருநீறு, கும்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும். மேலும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |