Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கோடை காலத்திலும் தட்டுப்பாடின்றி கிடைக்க…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கோடை காலத்திலும் காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் விதமாக, அவற்றின் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி, தோட்டக்கலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் துறைச் செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் பிருந்தாதேவி போன்றோர் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி காய்கறிகள் கிடைக்க சாகுபடியை அதிகரிக்க தற்போதே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தோட்டக் கலை பண்ணைகளில் காய்கறி நாற்றுகள், விதைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Categories

Tech |