கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது.
சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் சுதா சார்பில் தொடரபட்ட இந்த வழக்கில் அம்மா உணவகங்களில் மூலமாக சத்துணவை இலவசமாக வழங்க வேண்டும் என்றும்,
சத்துணவு திட்டத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்காத தால் அவர்களுக்கு சத்துணவு மற்றும் சத்து மாத்திரைகளும் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை நியாயமானதுதான். நோய் எதிப்பு சக்தியை உருவாக்க கூடிய வகையில் உணவு சத்துணவுத் திட்டம் மூலமாக ஏழை எளிய குழந்தைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான திட்டம் இருக்கிறதா ? என்று சொல்லி அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திவைத்துள்ளார்கள்.