Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பல நலத்திட்டங்களை அரசு பொதுமக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்காக பெற்ற நகைக்கடன்கள் மற்றும் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. மேலும் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு உட்பட நகைக்கடன் பெற்றவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்து இருந்தது. இதற்கான அரசாணை தற்போது வரை செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏனென்றால் நகைக்கடன் பெற்றவர்களில் பெரும்பாலானோர் போலி நகைகளை கொண்டு நகைக்கடன் பெற்றிருப்பது மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நபர் 300க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நகையே பெறாமல் கடன் பெற்றுள்ளது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையில் சில மோசடிகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் 48,84,726 நகைக்கடன்கள் கணினி வாயிலாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் இருப்பதாவது, நகைக்கடனை முழுமையாக செலுத்திய 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர், 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்ற நபர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், 40 கிராமுக்கும் கூடுதலாக நகைக்கடன் பெற்ற ஏஏஒய் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர்களின் சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் படி தள்ளுபடிக்கு தகுதிபெறும் நபர்களின் விவரங்கள் எக்செல் படிவத்தில் இமெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடிதத்தில் 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் கூடுதலாக நகையை அடமானம் வைத்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |