Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்குத் தீர்வுகாண ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அனைத்து கிராம மக்களும் பயன் பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக தமிழக மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |