Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….. உடனே போங்க….!!!! 

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு இந்த விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. http://tngasapg.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 20ம் தேதியும், அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை 21ம் தேதியும் தொடங்கும்.

தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பட்டப் படிப்புகளில் 24 ஆயிரத்து 341 இடங்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகின்றது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 16ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்ப பதிவு செய்பவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரி மூலம் 20ம் தேதி வெளியிடப்படும். அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை செயல்பாடு வரும் 21ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |