தமிழகத்தை பொறுத்த வரை தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக பூச்சி மருந்து மற்றும் எலி மருந்துகள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்து பேஸ்ட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை ஆன்லைனிலும் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் தற்கொலைகளை தடுக்கும் விதத்தில் அபாயகரமான ஆறு பூச்சி கொல்லி மருந்துகளுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.