Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உஷார்….. மாவட்ட ஆட்சியர்களுக்கு அலெர்ட்….. சுகாதார செயலாளர் அதிரடி….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். உடல்நல பாதிப்பு, உயிரிழப்புகள் என்றால் மறுபக்கம் பொருளாதார இழப்பு என அனைத்து தரப்பு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இருந்து விரைவில் விடுபட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சில மாதங்களாக அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் தேர்வுகள் நிறைவடைந்து அடுத்த கல்வி ஆண்டு இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளது.

இந்த சூழலில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. சென்னையில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் தொற்று பரவ தொடங்கியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |