உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி3 முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கூடுதலாக 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.