Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் மாவட்ட வழிகாட்டி கையேடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்து அறநிலைத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி,  கோவில்களில் மாவட்டக் கையேடுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதன் அசல் பிரதியை இணை ஆணையர்கள் சேகரித்து இந்த அவலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் தலவரலாறுகள் வெளியிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது மாவட்டம் வாரியாக அந்தந்த பகுதியின் சிறப்பு வாய்ந்த மற்றும் பாடல்பெற்ற தலங்களைத் தொகுத்து ஆன்மீகத் தலங்களுக்குப் பயணிப்பவர்களுக்கு வசதியாக திருக்கோயில்களின் வழிகாட்டி எனும் பெயரில் மாவட்டக் கையேடுகள் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்ட கையேட்டில் கோவிலின் சுருக்க வரலாறு, அமைவிட வரைப்படம், தொடர்பு முகவரி, திருக்கோவிலின் சிறப்பு மற்றும் தரிசிக்க வேண்டிய படங்களுடன் கூடிய தகவல்களுடன் அருகில் உள்ள சிறப்பு தலங்களின் குறிப்புகளும் வெளியிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே அளவில் பல்வண்ண தரத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் அசல்பிரதியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தலத்தின் வரலாற்று சிறப்பை பக்தர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் அடிப்படையில் விரைவு குறியீடுகளும் வெளியிடப்படும். இதன் காரணமாக இந்தியா மற்றும் மற்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்து பயனடையும் அடிப்படையில் இத்தகைய கையேடுகள் தயார் செய்ய மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் பணிகள் முடிந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |