தமிழகம் முழுவதிலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். நாம் எங்கு சென்றாலும் அது உதவும். குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது முக்கியம். அதில் கட்டாயம் குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை சரியாக செய்வதில்லை. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பிறகு, எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. அதனால் குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்தபின் சம்பந்தப்பட்ட பிறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. அதனால் பெற்றோர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், தங்களின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பெயர் பதிவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.