Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துகள்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

 இன்று முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்கு வருவதற்காக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு மாணவ, மாணவி பள்ளி சீருடை அல்லது அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என கூறியிருந்தது. மேலும் மாணவர்கள் தங்கள் நிறுத்தத்தில் இருந்து தான் பயிலும் பள்ளி, கல்லூரி வரை மட்டுமே இலவசமாக பயணம் செய்ய முடியும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |