விருதுநகர்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியப்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
புதுக்கோட்டை
திருமயம் துணைமின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
திருவெண்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருவெண்காடு, மேலையூர், மணிக்கிராமம், பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், திருநகரி, திருவாலி, மேலச்சாலை, மங்கைமடம், அண்ணன்பெருமாள் கோவில் மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பொறையாறு, மற்றும் கிடாரங்கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பொறையாறு, தரங்கம்பாடி, சாத்தங்குடி, திருக்கடையூர், பிள்ளைப்பெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், சந்திரப்பாடி குட்டியாண்டியூர், பெருமாள் பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என். என். சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி. மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், மடப்புரம் காலகஸ்திநாதபுரம், கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, முடிகண்டநல்லூர் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வடமதுரை
வடமதுரை துணை மின் நிலையத்தில் இன்று (27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுத ம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, சடையம்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர் நாயக்கன்பட்டி, வெள்ளைபொம்மன் பட்டி, ஊராளிபட்டி, சீத்தப்பட்டி, தும்மலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது .
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அரசூர் ஆச்சாள்புரம் எடமெனல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் சீர்காழி தென்பாதி கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் புத்தூர் மாதானம் அரசூர் புதுப்பட்டினம் ஆச்சாள்புரம் இடமணல் வைத்தீஸ்வரன் கோவில் பழைய பாளையம் தாண்டவன்குளம் கொண்டல் ஆதமங்கலம் பெருமங்கலம் கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது .
கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: – கை. களத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை. களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நுத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்தி நகர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்
நத்தம் அருகே செந்துறை மற்றும் வே. குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் இன்று நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி மருநூத்து, கோணப்பட்டி சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி. ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர் ஒத்தக்கடை. எர்மநாயக்கன்பட்டி, எஸ். கொடை மற்றும் இராமராஜபுரம். ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூா் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமராவதிபுதூா், ஐ. டி. ஐ, தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைகாரன்பட்டி, அரியக்குடி, விசாலயன் கோட்டை, எஸ். ஆா். பட்ட ணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு. நல்லூர் மற்றும் சத்தியவாடி ஆகிய துணை மின்நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் .