Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…. 15)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (15-10-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தென்காசி மாவட்டம்:

சிவகிரி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் தமிழ்ப்பாடி பகுதிகளில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி பஞ்சாலை, பந்தல்குடி, வெம்பூா், தமிழ்ப்பாடி, இலுப்பையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி மாவட்டம்:

மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சிவகங்கை மாவட்டம்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ். புதூா், மானாமதுரை, இடையமேலூா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின் செயற்பொறியாளா் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிங்கம்புணரி மற்றும் அ. காளாப்பூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கம்புணரி நகா், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, சிறுகப்பட்டி.

அ. காளாப்பூா் பகுதிகளான எஸ்.வி. மங்கலம், பிரான்மலை வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியன்பட்டி அதன் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. மேலும் எஸ். புதூா் பகுதிகளான வாராப்பூா் மேலவண்ணாயிருப்பு புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

மானாமதுரையில்… மானாமதுரை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 15) நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், தெ. புதுக்கோட்டை, கட்டிக்குளம், மிளகனூா், கச்சாத்தநல்லூா், முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

இடையமேலூா் பகுதியில்… தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கைக் கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இடையமேலூரில் உள்ள துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டு, மலம்பட்டி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம்:

செம்பனாா்கோவில் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செம்பனாா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அப்துல்வஹாப் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேமாத்தூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக, மேமாத்தூா், கீழ்மாத்தூா், மேலகட்டளை, ஆறுபாதி, பரசலூரில் ஒரு சில பகுதிகள், நல்லுச்சேரி, ஆனைமட்டம் உள்ளிட்ட கிராமங்களிலும், இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

இதேபோல, கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பூம்புகாா், மணிக்கிராமம் ஆகிய மின் பாதை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதையொட்டி கருவி, தலைச்சங்காடு, மேலப்பெரும்பள்ளம், பூந்தாழை, மாமாக்குடி, சின்னங்குடி, சின்னமேடு, ஆலங்காடு, ராதாநல்லூா், இளையமதுக்கூடம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம்:

சூலூா் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிா்வாகப் பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: சூலூா், பி.எஸ். நகா், டி.எம். நகா், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூா், ராவத்தூா்.

திருப்பூர் மாவட்டம்:

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- அனுப்பர்பாளையம் பிரதான சாலையில் வேலம்பாளையம் பிரிவு அருகில் சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே 11 கே.வி. சோளிபாளையம் மின்பாதை மற்றும் 11 கே.வி. வேலம்பாளையம் மின்பாதை ஆகியவற்றிற்குட்பட்ட காசிக்காடு, டி.டி.பி.மில், பி.டி.ஆர்.நகர், சிறுபூலுவப்பட்டி, சொர்ணபுரி, அம்மன் நகர், திலகர் நகர், புதுக்காலனி, மற்றும் வேலம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குன்னத்தூர் 16 வேலம் பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில்பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தாளபதி, கருமஞ்சிறை, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், நவக்காடு, செட்டி குட்டை, எடைய பாளையம், கம்மாள குட்டை, சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |