தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று(அக்டோபர் 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலங்குளம் ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள் புரம், கழுநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும்.
டம் புளியங்குடி உபமின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வீரசிகாமணி பகுதியில் வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் பிற்பகல் 2 வரை வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
காஞ்சிபுரம்
மின் பராமரிப்பு பணி காரணமாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருத்தணி நகரம், அகூர் , பொன் பாடி, லட்சுமாபுரம், சின்ன கடம்பூர், மத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின்தடை மின்வாரியம் அறிவித்துள்ளது.
விருதுநகர்
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆதலால் தொட்டியபட்டி, புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், அழகாபுரி, கலங்கா பேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ. எஸ். ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
நாளை காலை 09. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2. 00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது அதனால் அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம், விவசாயக் கல்லூரி, அம்மாபட்டி, காளி காப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம் திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் மேரிஸ் கார்னர் ஈஸ்வரி நகர் ஆகிய மின் பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் நேரு நகர் கன்னியம்மாள் நகர் மேல மனோஜி பட்டி கேஸ் குடோன் கல்லு குளம் மாதா கோவில் தெரு, பூக்கார தெரு மேற்குலாயம் கிழக்குலாயம், அன்பு நகர் 20 கண் பாலம் ராமகிருஷ்ணா நகர் மருத்துவ கல்லூரி சாலை மற்றும் மருத்துவ கல்லூரி முதல் கேட் முதல் மூன்றாவது கேட் வரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது .
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியில் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட டி. எம் நகர் பீடர் பகுதியில் உள்ள உயர்மின் பாதைகளில் மின்னழுத்தம் குறைபாடுகளை சரி செய்வதற்கு நாளை பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொன்னால் அம்மன் சோலைப் பகுதியில் மின்வினியோகம் இருக்காது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின்நிலையம், தா. பழூர் துணை மின்நிலையம், உடையார்பாளையம் துணை மின்நிலையம் மற்றும் தழுதாழைமேடு துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து, மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த. மேலூர், த. பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா. பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர். இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், (வடக்கு, தெற்கு) தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களின் அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.