பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வழக்கம். பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப, அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து 176 சிறப்பு பேருந்துகள் உட்பட 2,226 பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.