Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(செப்..27)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்….27) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரியை வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டாரம்பாளையம், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது/

கரூர் மாவட்டம் நச்சலூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நச்சலூர், நல்லூர், ஆர்த்தாம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கள்ளை மற்றும் புரசம்பட்டிஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமாரிப்பு காரணமாக காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை மின்விநியோகம் வழங்கப்படமாட்டாது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் விநியோகம் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, குளச்சல் மின் விநியோகப்பிரிவுக்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில் மின் கம்பிகள் மற்றும் மின் தளவாட சாதனங்களை மாற்றி புதிதாக அமைக்கும் பணிகள் நடக்கவிருப்பதால் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை குளச்சல் பஸ் ஸ்டாண்டு, மார்க்கெட், நெசவாளர்தெரு, பள்ளிவிளாகம், அழகனார்கோட்டவிளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னை

திருமழிசை துணை மின் நிலையம்: திருமழிசை, குண்டுமேடு, சிட்கோ தொழிற்பேட்டை, இருளபாளையம், பிராயம்பத்து, வெள்ளவேடு, மேல்மணம்பேடு, வயலாநல்லுார், அணைக்கட்டுச்சேரி, சித்துக்காடு, நொச்சிமேடு, சமத்துவபுரம், நெடுஞ்சேரி, நரசிங்கபுரம், மேட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான செங்குன்றம், மாதவரம் நெடுஞ்சாலை வடகரை , கரிகால் சோழன் சாலை, சிஆர்பி நகர், அன்னை நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 09. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான மேத்தா மருத்துவமனை, மதிரவேடு, காவேரி நகர், கோ ஆப்ரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 09. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான திருமழிசை, அன்னைக்கட்டுசேரி, அமுதூர்மேடு, வயலார் நல்லூர், சித்துகாடு மற்றும் மேற்காணும் இடங்களை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக காலை 09. 00 மணி முதல் மதியம் 2. 00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருச்சி

திருச்சி மாவட்டம் சிறுகனூா் பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது.சிறுகனூா், ஆவாரவள்ளி, திருப்பட்டூா், சி. ஆா். பாளையம், எம். ஆா். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெய்குளம், நெடுங்கூா், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், பி. கே. அகரம், ரெட்டிமாங்குடி, ஜி. கே. பூங்கா, ஸ்ரீதேவிமங்கலம், கூத்தனூா், கொளக்குடி, கண்ணாக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , திருமூலநகர் , வழுக்கம் பாறை , கீழமணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , கொட்டாரம் , சாமிதோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டுப் பொத்தை , வாரியூர் , சின்னமுட்டம் , பால்குளம் போன்ற பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது .

Categories

Tech |