Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்துகளில்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் இந்த வருடமும் சிறப்பு பேருந்து தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பதிவு அதாவது அக்டோபர் 21ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது.

அதன்படி பயணிகள் tnstc.in என்ற இணையதளம் மூலம் அல்லது டி என் எஸ் டிசி ஆப் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலமாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.தீபாவளி விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் விலை உச்சத்தில் உள்ளதால் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.மேலும் அக்டோபர் 21ஆம் தேதி பயணிப்பொருக்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |