தமிழக முழுவதும் இன்று ஜூலை 24ஆம் தேதி 50000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 96 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 87 சதவீதத்தை நெருங்கி உள்ளது. பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதனால் கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இன்று தமிழக முழுவதும் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசியை போடும் பணியை செய்ய உள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.