தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் என்றும் அப்படி முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்,முக கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, தடுப்பூசி செலுத்தி கொள்வதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.
எனவே பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை கடைபிடித்தால் அவர்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.