தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் அரசு விழாக்களின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இன்று மே தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் டாஸ்மாக் கடைகளை மூடும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
