தமிழகத்தில் கொரோனா 3வது அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று (பிப்..1) முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள் குறித்து காண்போம்.
# சமுதாயம், கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தற்போது அமலில் உள்ள நடைமுறையே தொடரும்.
# மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது.
# பேருந்துகள், பொதுப் போக்குவரத்து, புறநகர் ரயில்கள் 100% பயணிகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
# ரயில் பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை.
# 1 முதல் 12 ம் வகுப்புகளுக்கு இன்று(பிப்..1) முதல் பள்ளிகள் திறப்பு.
# கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி
# வழிபாட்டுத் தலங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
# உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகளில் 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
# பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
# கடற்கரைக்கு செல்ல அனுமதி
# சுப நிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
# துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் வாரத்தின் எல்லா நாட்களும் இயங்க அனுமதி.
# வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகள் இன்று (பிப்..1) முதல் அமல்
# உடற்பயிற்சி கூடங்கள்,விளையாட்டுக்கள், உணவகங்கள் யோகா பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கில் அனைத்து கட்டுப்பாடுகளிலும் சலுகைகளைத் தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதே சமயத்தில் தொடர்ந்து முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.