தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கோவிலுக்கு அதிகம் செல்வதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் இன்று முதல் 18-ஆம் தேதி வரை தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!
