தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.
சென்னை
தாம்பரம் பகுதி அரிசி ஆலை ரோடு, ஜெயசந்திரன் நகர். பொன்னேரி பகுதி; கவரபேட்டை, மேல்முதலாம்பேடு, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேடூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குபட்டி , ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னலாம்மன் சோலை , விளமரத்துப்பட்டி, கஞ்சம்பட்டி, உடுக்கம்பாளையம் , குண்டலபட்டி , லட்சுமபுரம், தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
அதனைப்போலவே கிழவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவிந்தாபுரம் , அமராவதி நகர் செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை , மானுப்பட்டி, சைனிக் பள்ளி, கோவிந்தாபுரம், தும்பலபட்டி,ஆண்டிய கவுண்டனூர், ஆலாம்பாளையம், கரட்டுமேடு, எலையமுத்தூர், கிழவன் காட்டூர், குருவப்பா நாயக்கனூர், ஜக்கம்பாளையம் , பெரிசனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மூலனூா், கன்னிவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவி புதூா், கிளாங்குண்டல், மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத் தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா், பெருமாள் வலசு பகுதிகளில்
மின் விநியோகம் இருக்காது.
தேனி
தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 10 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கமுதி துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறுவதால், எனவே உலகநடை, பாம்புநல் நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை , இடையன்குளம், தோப்படைபட்டி, ஓ கரிசல்குளம், கோவிலாங்குளம், எருமை குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நரிக்குடி, வீரசோழன், ஒட்டங்குளம், மேலப்பருத்தியூர், வீரஆலங்குளம், மினாக்குளம், பாப்பாங்குளம், குறையறைவாசித்தான், மறையூர், மாயலேரி, டிவேலங்குடி, ஆண்டியேந்தல், சாத்திசேரி வல்லகுளம், உலக்குடிநாலூர், இருஞ்சிறை, கட்டனூர், உழுத்திமடைபொட்டப்பச்சேரி, வாகைக்குளம், சாலைஇலுப்பைகுளம், தர்மம், கொட்டகாட்சியேந்தல், மறைக்குளம், புளியங்குளம், கம்பாளி, மேலந்தல், விடத்தக்குளம், கண்டுகொண்டான்மாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.