தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கிணறுகள் அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை உடனே செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.