ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக 751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் பி அமுதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மாநிலத்தில் சொந்த வரி வருவாயிலிருந்து 10 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் கிராமப்புற அமைப்புகளுக்கு 56 சதவீதமும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இவற்றில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாநில நிதி ஆணையத்தின் மானியங்கள் கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதன்படி ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள் மாவட்ட ஊராட்சிகள் போன்றவற்றிற்கு ரூபாய் 251 கோடியை 99 லட்சத்து 77 ஆயிரத்து 857 மானியமாக வழங்கப்படுகிறது. இவற்றில் ஊராட்சிகளுக்கு ரூபாய் 424 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 716 ஆம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூபாய் 269 கோடியே 66 லட்சத்து 90,857 மானியங்களாக வழங்கப்பட இருக்கின்றது மேலும் மாவட்ட ஊராட்சிகளுக்கு 58 கோடியே 6,71, 286 மானியமாக வழங்கப்பட இருப்பதாக அந்த உத்தரவில் கூறியுள்ளார்.