தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையினால் ஒரு சில இடங்களில் மோசமாக உள்ள வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுவது செய்தியாக வெளிவருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இடிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
வகுப்பறை வசதி இல்லாமல் வளாகத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்த விவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகள் தரம் உயர்த்த உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.