Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். அதில் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை அமைச்சர் அன்பில் மகேஷிடம் முன்வைத்தனர். அதுமட்டுமன்றி தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் படியும் வலியுறுத்தினார்கள். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர் சங்கம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய கோரிக்கையை அறிக்கையாக தயார் செய்து முதல்வர் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |