கொரோனா கால பொது முடக்கம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் தமிழக அரசாங்கம் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. கல்வியில் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக புதிய நடைமுறையை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் வாயிலாக தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறையை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாகத்தான் இதற்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை என்பதற்குப் பதிலாக ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அவகாசம் என்று தெரிவித்துள்ளார். www.tngasa.in– இல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.