தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இடைநின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படாமல் உள்ளனர். அதனை பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். இது அவர்களின் பள்ளிப்படிப்பை சீரழிக்கிறது. எனவே அவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!
