தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளுறை பயிற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் அது சார்ந்த பயிற்சிகள் வழங்கும் அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி முன்னுரை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேர பயிற்சி வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக குறுகிய காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் தொலைக் கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17 முதல் 21-ஆம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்த பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.