Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவ்வகையில் ஊதிய நிலை பத்தில் களம் 40அடைந்த ஆசிரியர்களுக்கு அதாவது அதிகபட்சமாக 65,500ரூபாய் வரை சம்பளம் பெறும் ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பதவி உயர்வு எதுவும் இல்லாமல் 20,600 ரூபாய் முதல் 65,500 ரூபாய் என்ற ஊதிய விகிதத்தை அதிக பட்ச ஊதிய நிலையான 65,500ரூபாய் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |