தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கருவிகளில் இசைக்கப்படுவதால் விழாவில் பங்கேற்போர் உதட்டளவில் கூட தமிழ் தாய் வாழ்த்து பாடுவதில்லை.
எனவே பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.