விழுப்புரம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசு பஸ் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் கொடுத்த நடத்துநர் சிலம்பரசன் உடந்தையாக இருந்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது போக்குவரத்து கழகத்திற்கு தலை துணிவையும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் ஒரு கருப்பு நிகழ்வு. இது போன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.