தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாக்கிய நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் நவம்பர் 18ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.