Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து MLA-க்களுக்கும்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது ஜனவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு கூறுகையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” என்று  அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூடுவதை அடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் கொரோனா பரிசோதனை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத்தை சார்ஜ் கோட்டையில் நடத்த இருந்த நிலையில், கொரோனா அதிகரிப்பால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |