தமிழகத்தில் திறந்தவெளி கூட்டங்கள் நடத்த வரும் 19ம் தேதி முதல் அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள் அங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.திறந்தவெளியில் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, கல்வி, பொழுதுபோக்கு, கலாச்சாரம், சமூகம், மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெறவேண்டும். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு நடத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.