Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி…. 2 நாளில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான  முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் படுத்துவதற்கான ஒரு முடிவை தமிழக உயர்கல்வித்துறை எடுத்திருக்கிறது.

அதற்கான ஒரு விஷயமாக ஆன்லைன் மூலமாகவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இரண்டு நாட்களில் இணையதளத்தில் தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும் கூறி இருக்கிறார். ஒற்றை சாளர ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக  ஒரே  நேரத்தில் பல கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |