Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் உத்தரவு ..!!

சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் ? என்ற வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. அதேபோல தமிழக அரசும் வழிகாட்டியுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஆன்லைன் வகுப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை அனைத்து பள்ளிகளும்  பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி விசாரணை ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |