கொரோனா கால பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு…. தமிழக அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை. தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் பலகை வைத்து மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.