இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி வினியோகம் செய்ததில் மொத்த மக்கள் தொகையில் சதவிகிதத்தில் அளவில் இதோ புள்ளிவிவரம்: குஜராத் 40.2%, கர்நாடகா 37.9%, ஆந்திர பிரதேசம் 30.6%, ஆனால் தமிழ்நாட்டிற்கோ 21.9%, தமிழகம் தொடர்ந்து பாரபட்சமாக நடத்தப்படுவது ஏன்? மோடி இந்தியாவிற்கு பிரதமரா? மோடி அவர்களே, வேண்டாம் விபரீதம் என காங்கிரஸின் கோபண்ணா தெரிவித்துள்ளார்.