நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முற்பட ஒன்பது மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.