தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 2700 வரை அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 95% பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது பரவும் கொரோனா வகை வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தினமும் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் 10 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு இருந்தாலோ, 40% மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் தான் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். ஆனால் தற்போது அது போன்ற நிலைமை இல்லை. எனவே கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது, கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவிற்கு கொரோனா பரவலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.