Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்டும் கொரோனா…. இன்று ஒரே நாளில் உச்சம்…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி கொரோனா பாதிப்பு விவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 17,934 பேர் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 19 பேர் உயிரிழந்துள்ளார்.  இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,905 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,039 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,21,725 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |