அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவாகி கரை கடந்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வருவதாகவும் இதனால் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.